பிரதான செய்திகள்

போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாரியபொல, புத்தளம் வீதியின் பஸ் டிப்போவுக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றில்  பயணித்துக்கொண்டிருந்த போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (9) மாலை 5.45 மணியளவில் வாரியபொல பொலிஸாரினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண் 39 வயதானவர் எனவும்,ஏனைய இருவரும் 49 மற்றும் 50 வயதானவர்கள் என்றும் இவர்கள் மன்னார், நாத்தாண்டிய, நீர்கொழும்பு பிர​தேசங்களைச் சேர்ந்தர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் (10) வாரியபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment