உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவின்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்களை உள்வாங்க வேண்டாம் என மார்ச் 12 அமைப்பின் இணைப்பாளரும் பெப்ரல் அமைப்பின் தலைவருமான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அவ்வாறானவர்கள் உள்வாங்கப்பட்டால் அது தொடர்பில் கட்சித் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்தல் தொடர்பாக மார்ச் 12 இயக்கம் தமது நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

0 comments:
Post a Comment