யாழ்ப்பாணம்-கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள டீசலில் நீர் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பிலான ஆய்வு பரிசோதனைகளை முன்னெடுக்கும் வரை இந்த எரிபொருள் நிலையத்தின் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்ற டிரக்டர் வண்டியொன்று பழுதடைந்தமையடுத்தே குறித்த எரிபொருள் நிலையம் தொடர்பில் மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன்,இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளர் மற்றும் பணியாளர்களுடன் பிரதேசமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
எனினும் கடந்த சில நாட்களாக வடக்கில் பெய்துவரும் மழையினால் நிலக்கீழ் எரிபொருள் தாங்கியில் நீர் கலந்திருக்கலாம் என இதன் முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment