மட்டக்களப்பு கடற் பகுதியில் பெருமளவிலான பாம்புகள் கரையொதுங்கியமை, கடல் நீரின் வெப்பம் காரணமாகவே என, நாரா நிறுவனம் கூறியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், கடல் நீர் வெப்பமடைந்தமைக்கான காரணம் குறித்து தற்போது விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில், மட்டக்களப்பு - நாவலடி பகுதி கடற் பகுதியில் பெருமளவான பாம்புகள் கரையொதுங்கி இருந்ததோடு, மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் சிக்கியிருந்தன.
இந்தநிலையில், இதற்கான காரணம் குறித்து ஆராயுமாறு நாரா நிறுவனத்திடம் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரியப்படுத்தியிருந்தது.
இதற்கமைய, அவர்கள் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, கடல் நீரின் அதிக வெப்பமே இதற்கான முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

0 comments:
Post a Comment