(ஆதம்)
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை வட்டார ரீதியாக அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும், தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும் இன்று (16) இரவு அல்-முனீறா வட்டாரத்தில் இடம்பெற்றது.
அல்-முனீறா வட்டார வேட்பாளர் பாரிஸ் முகைதீன் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அல்-முனீறா வட்டாரத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை 2, 6, மற்றும் 11ஆம் பிரிவுகளிலிருந்தும் தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள், ஆதரவாலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உரையாற்றுகையில்...
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்த தேர்தலில் எமது கட்சி சார்பாக சிறந்த வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். எமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து அட்டாளைச்சேனை பிரதேச சபையை நாம் கைப்பற்ற வேண்டும். அதனூடாக எமது பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்துகொள்ள முடியும்.
குறிப்பாக அல்-முனீறா வட்டாரத்தில் சகோதரர் பாரீஸ் முகைதீனை வேட்பாளராக நியமித்துள்ளோம். இந்த வட்டாரத்திலுள்ளவர்கள் அவரது வெற்றிக்கு உழைக்க வேண்டும். அவரின் வெற்றியினூடாக இந்த வட்டார மக்கள் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் யானைச் சின்னத்துக்கு வாக்களிப்பதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக சகலரும் உழைக்க வேண்டும். யானைக்கு கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் வாக்களித்ததன் ஊடாக தயாகமகே போன்றோர் வெற்றி பெற்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டதனையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment