பிரதான செய்திகள்

பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் 10 ஐ ஆரம்பிக்க அனுமதி

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் 2018.01.01 தொடக்கம் தரம் 10 ஐ ஆரம்பிக்க கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

தரம் 10 இல் கல்வி கற்பதற்காக, சின்னப்பாலமுனை, ஜலால்புரம், உதுமாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், சுமார் 2 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம் அல்லது தூரப் பிரதேசங்களிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

அல் ஹிக்மா பாடசாலை ஒரு கிராமப் புறத்தில் அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக தரம் 9 வரையான வகுப்புகளே காணப்படுகின்றன. கடந்த பல வருடங்களாக பெற்றோர்களால் இப்பாடசாலையில் தரம் 10 ஐ ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோரிக்கைக்கமைய, இப்பாடசாலையில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு தொடக்கம் 10 வகுப்பையும், 2019ஆம் ஆண்டு தரம் 11 ஐயும் ஆரம்பிப்பதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. அப்துல் நிஸாம் சிபாரிசு வழங்கியுள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment