பிரதான செய்திகள்

ஆலயடிவேம்பு பிரதேச செயலாளரின் எனக்கெதிரான அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது: SM சபீஸ்

அக்கரைபற்று மக்களின் வீடுகள் நீரில் மூழ்கியிருக்கும்போது முகத்துவாரத்தை வெட்டி அகழ்வதற்கு வந்த அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உதவி ஆணையாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளருமான திரு அஸ்மி அவர்களை இயந்திரங்களோடு திருப்பி அனுப்பிய செயற்பாட்டுக்கு ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் மன்னிப்பு கோராத நிலையில் முகத்துவாரம் வெட்டப்பட்டது, பரவாயில்லை என்று நாங்கள் விட்டுவிட்டோம். ஆனால் தான்செய்த தவறை மறைத்து போலியான அறிக்கையை விடுத்துள்ளமையினால் உங்களுக்கு பதில் எழுதவேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு  ஏற்பட்டுள்ளது.

மழை காலம் வந்தால் தொன்றுதொட்டு  விவசாயிகள் முகத்துவாரத்தை வெட்டிவிடுவார்கள் அல்லது நீர்பாசன பொறியியலாளருக்கு தெரியபடுத்திவிட்டு  எங்களது சபைகளினூடாக முகத்துவாரத்தை வெட்டிவிடுவோம் இதுதான் வரலாறுமாகும்.

திதாக நீங்கள் சட்டம்போடுவது எதற்காக? முகத்துவாரத்தை வெட்ட வேண்டாம் என்று சொல்லுவதற்கும் விவசாய காணிகளுக்கு நீர்வழங்குவதை  தீர்மானிப்பதற்கும் நீங்கள் என்ன நீர்ப்பாசன தினைக்கள பொறியியலாளரா?

நீங்கள் புதிதாக SLAS சித்தி அடைந்து பதவிக்கு வந்தவர் உங்களைவிட அனுபவத்திலும், வயதிலும், மற்றும் கள செயற்பாடுகளிலும் மூத்தவர்களான அக்கரைபற்று பிரதேச செயலாளர் மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபை  ஆணையாளர் போன்றோரின் வேண்டுதலை நிராகரித்து திருப்பி அனுப்பியது அவர்கள் முட்டாள்கள் என்ற அடிப்படையிலா?  இல்லை நீங்கள் அதிபுத்திசாலி என்ற எண்ணத்திலா?

சரி அதைவிட்டு இப்பிரதேசத்தின் மாரிகாலம் ஆரம்பிக்கும் காலம் உங்களுக்கு தெரியாது என்றுகூட வைத்துக்கொள்வோம். இப்போது நாட்டில் எல்லாப்பிரதேசங்களிலும் மழை பொழிகிறது வானிலை அறிக்கையில்  நாட்டின் அனைத்துபாகங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, குளங்களும் நீர்நிலைகளும்  நிறம்பிக்கொண்டிருக்கிறது என்று சொல்லும்போது சாதாரண பாமரனுக்குகூட முகத்துவாரத்தினை வெட்டவேண்டும் என்ற அறிவு இருக்கும்போது உங்களுக்கு இது புலப்படாமல் போனது எவ்வாறு?

அக்கரைப்பற்று நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் அவர்களிடம் இப்பிரச்சினை தொடர்பாக அமைச்சிலிருந்து வினவப்பட்டபோது ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் முகத்துவாரத்தை வெட்டுவதற்கு அனுமதி தருகிறாரில்லை  என்று கூறப்பட்டுள்ளது.  நீர்ப்பாசன திணைக்களத்தின் நியாயாதிக்கதுக்குட்பட்ட முகத்துவாரத்தை வெட்டுவதற்கு பிரதேச செயலாளரின் அனுமதி எதற்காக? அவருக்கு நாம் தெரியப்படுத்த வேண்டுமே ஒழிய அனுமதி தேவையில்லை என காட்டமாக அமைச்சிலிருந்து   சொல்லப்பட்டதன் பின்னே மறுநாள் முகத்துவாரம் வெட்டப்பட்டது?

ஆனால் சம்பவம் நடைபெற்ற தினம் மாலைவரை  தங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று பிரதேச செயலாளர் கூறியுள்ளமை  உங்கள் பொய் முகத்தை அடையாளபடுத்தியுள்ளதோடு  நீங்கள்  நிருவாகம்  தெரியாத அதிகாரியா? என எங்களை எண்ணவைக்கிறது.  

இதுதொடர்பாக அரசாங்க அதிபருக்கு தெரியபடுத்தியதன் விளைவாக மறுநாள் காலை முகத்துவாரம் வெட்டப்படும்போது ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் அவ்விடத்தில் தனது முகத்தை காட்டுவதற்காக ஆஜராகிருந்தார். நாங்கள் அறிய கடந்த 30வருடங்களுக்கு மேல் முகத்துவாரம் வெட்டுவதற்கு ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் வந்ததாக தெரியவில்லை இதுவே முதல் தடவையாகும்

 ஊடக தர்மத்தை மீறியதாக குற்றம் சொல்லியுள்ளீர்கள்.

ஊடக தர்மம் என்ற அடிப்படையில் தமிழ் ஊடகங்கள் செய்த சதியினால்தான் கடந்தகால துரோகங்கள் மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது இப்போது இலத்திரனியல் ஊடகங்களினால் உங்கள் போலிமுகங்கள் வெளிகொனரப்படுகிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

மழைக்கு முளைத்த காளான் அரசியல்வாதி இஸ்மாயில் ஸ்டோர் முன்னால் நின்று கையேந்தும் நிலையை ஒழிப்பேன் என வரலாறு தெரியாமல் கூறினாலும் அவர் அவரது மக்களை முன்னேற்ற ஆசைகொள்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம் ஆனால் நீங்கள் அவர் பின்னால் ஒதுங்கிக்கொண்டு எங்களது மக்களின் வீடுகள் நீரில் மூழ்கி தவிக்கும்வரை முட்டுக்கட்டை போடுவதனை பார்த்துகொண்டிருக்க முடியாது.  

நாங்கள் அரசியல் அதிகாரம் இல்லாத காலத்திலும் பயங்கரவாதி பிரபாகரனுக்கு எதிராக குரல்கொடுத்தவர்கள் எங்களுக்கு உங்கள் மட்டமான சிந்தனையை வைத்துக்கொண்டு அரசியல் அறிவுரை கூறவருவதற்கு நாங்கள் ஒன்றும் தொத்த பபா கிடையாது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment