(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)
கருணா அம்மானை அரசியலிருந்து ஓரம் கட்டுவதற்காகவே அவரை இனவாதியாக சித்தரிக்க முயலுகின்றனர். அதனோடு திட்டமிடப்பட்ட வெளிப்பாடே வாழைச்சேனை ஆட்டோ தரிப்பிட – கிரான் சந்தை பிரச்சனை என கருணா அம்மானின் புதிய அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வருன் கமலதாஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலுள்ள ஹாபீஸ் நசீர் எனும் ஒரு தனவந்தர் இயந்திரங்களுடன் பழகினாரே தவிர மக்களின் மனதை குறிப்பாக ஏழைகளின் துடிப்பை உணராதவர் - வருன் கமலதாஸ்
அவர் மேலும் தெரிவிக்கையில்…
உண்மையில் முஸ்லிம்கள் கிரான் சந்தையில் வர்த்தம் மேற்கொள்ள தடை அதேபோன்று வாழைச்சேனை பொலீஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆட்டோ தரிப்பிட பிரச்சனை போன்றவைகள் எதற்காக எழுப்பப்படுகின்ற.? அல்லது தூண்டப்படுகின்ற.? என்பதனை மிகவும் நடுநிலமையாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய கட்டாய நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
அதாவது இந்த நாட்டினை ஆட்சி செய்துகொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், ஐக்கிய தேசிய கட்சியும் சேர்ந்துதான் இவ்வாறான குளப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏன் என்றால்.? வருகின்ற தேர்தலினை ஒத்திவைப்பதற்கு தமிழ் – முஸ்லிம் இனக்கலவரம் அவர்களுக்கு தேவைப்படுகின்றது.
இவ்வாறு சில நாட்களாக வாழைச்சேனை பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆட்டோ தரப்பிட முஸ்லிம் – தமிழ் சகோதரர்களுக்கிடையிலான பிரச்சனை, அதனை தொடர்ந்து முஸ்லிம் வியாரிகள் கிரான் பொது சந்தையில் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டமை. அதற்கு முக்கியகாரணமாக முன்னாள் அமைச்சர் கருணா செயற்பட்டதாக வெளிவருகின்ற செய்திகள் தொடர்பான உண்மை நிலை, பிரச்சனைகளுக்கான காரணம் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் கருணா அம்மானின் புதிய அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வருன் கமலதாஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.

0 comments:
Post a Comment