சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். மிகப்பெரிய மாற்றம் சாத்தியம் என்பதற்கு உதாரணமாக, மோடி உள்ளார். அதுபோல, பெண்கள், தொழில் முனைவோராகத் தேவைப்படும் மாற்றங்கள், இங்கு சாத்தியமே,'' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் மகளும், ஆலோசகருமான, இவாங்கா டிரம்ப், பாராட்டு தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திர சேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் ஐதராபாதில், 3 நாட்கள் சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடக்கிறது.
2 சதவீதம் உயரும்
இதில் பங்கேற்க, அமெரிக்க அதிபர், டிரம்பின் மகளும், ஆலோசகருமான, இவாங்கா டிரம்ப் தலைமையிலான குழு வந்துள்ளது.இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்; நிகழ்ச்சியில், இவாங்கா டிரம்ப் பேசியதாவது:பெண்கள் தலைமையி லான தொழில்களின் வளர்ச்சி, இந்த சமுதாயத்துக்கு மட்டுல்ல, நம் பொருளாதாரத் துக்கும் மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தும்.
தொழில் துவங்குவதில் உள்ள பாலினப் பாகுபாட்டைக் குறைத்தால், உலகின், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2 சதவீதம் உயரும் என, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தொழில் துவங்குவதற்கு, பெண்களுக்கு தடையாக உள்ளவற்றை நீக்க வேண்டும். உலகெங்கும் பெண் தொழிலதிபர் கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், தொழில் துவங்க, அதை நிர்வகிக்க மற்றும் அதை விரிவு படுத்த உள்ள பிரச்னைகள் களையப்பட வேண்டும்.
அமெரிக்காவில் பெண்கள் தொழில் துவங்குவதற் காக, அமெரிக்க சிறு தொழில் நிர்வாகம் சார்பில் கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், தொழில் பயிற்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள் உட்பட பல்வேறு உதவிகளும் செய்யப்படுகின்றன.சிறு வயதில் டீ விற்று வந்த, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். மிகப் பெரிய மாற்றம் சாத்தியம் என்பதற்கு, உதாரணமாக மோடி உள்ளார். அதுபோல, பெண்கள் தொழில் முனைவோராகத் தேவைப்படும் மாற்றங்கள் இங்குசாத்தியமே.
இந்தியாவில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில், பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். அவரது தலைமையில், நாட்டின் பொருளாதாரம் வளர்வதுடன், ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாகவும்,இந்தியா விளங்குகிறது. நாட்டில், 13 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது, மிகப் பெரிய சாதனை.
தொழில் துறையில் உள்ள பாலின பாகுபாட்டை பாதியாக குறைத்தாலே, அடுத்த மூன்று ஆண்டு களில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும்.அமெரிக்க அதிபரின் நண்பரான மோடியால், அது சாத்திய மாகும் என, நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:
Post a Comment