வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
குறிப்பாக வடக்கில் நேர்முக தேர்விற்கு தோற்றிய தொண்டர் ஆசிரியர்களில் தகுதியானவர்களாக தெரிவு செய்யப்பட்ட 676 தொண்டர் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இவர்களின் சேவைக்காலங்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் எழுத்துப் பரீட்சை நடத்தாமலும் சம்பவ திரட்டு புத்தகங்களின் பதிவுகள் இல்லாமலும் இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கான அமைச்சரவை பத்திரம் தயார்படுத்தப்படுவதாகவும், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் அமைச்சரவை அனுமதியும் அதனை தொடர்ந்து ஒரு மதத்திற்குள் இவர்களுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment