(எஸ்.அஷ்ரப்கான்)
கம்பஹா மாவட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் நாளை (28) சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு யக்கல லின்றோஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
மல்வானை அல்- முஹ்ஸீன் நிறுவனத்தின் முழு அனுசரனை ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் விசேட பேச்சாளராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.ரீ.ஏ. நிஸாம் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆசிய சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் தவிசாளர் அல்-ஹாஜ் எம்.ஆர்.எம். றிஸ்வி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

0 comments:
Post a Comment