பிரதான செய்திகள்

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

பகலிரவாக நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து,159.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து 482 ஓட்டங்களை பெற்றது. 

இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 196 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 62 ஓட்டங்களையும் பெற்றனர். 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. 

பின்னர் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 96 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

பாக்கிஸ்தான் அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. 

அதன்படி பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது இன்னிங்சில் 317 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது. 

எவ்வாறாயினும் 248 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற பாகிஸ்தான அணி சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அந்த அணி சார்பாக சபிக் 112 ஓட்டங்களைப் பெற்றார். 

இலங்கை அணியின் இந்த வெற்றி மூலம் 2-0 என்ற அடிப்படையில் இலங்கை அணி முன்னிலையில் இருக்கின்றது. 

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெற்றதுடன், இதற்காக இளஞ்சிவப்பு இளஞ்சிவப்பு நிறத்திலான பந்து பயன்படுத்தப்பட்டது. 

பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடியது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment