சக வீரருடன் ஆட்டத்தின் போது மோதிக்கொண்டதில் இந்தோனேசிய கோல் கீப்பர் சொய்ருல் ஹூடா பலியானார். இவருக்கு வயது 38. இத்தகவலை அவரது கிளப் பெர்செலா லமோங்கன் உறுதி செய்தது.
இந்தோனேசியா கால்பந்து லீக் போட்டியில் செமன் படாங் அணிக்கு எதிராக பெர்செலா அணி விளையாடியது. இதில் தன் அணி வீரர் ரேமன் ரோட்ரிக்ஸுடன் கோல் கீப்பர் சொய்ருல் ஹூடா மோதிக்கொண்டதில் மைதானத்தில் நிலைகுலைந்து சாய்ந்தார்.
உடனடியாக ஹூடாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் சொய்ருல் ஹூடா மரணமடைந்தார்.
மருத்துவ அறிக்கையில், நேரடியாக மோதிக்கொண்டதில் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கிளப்புக்காக நீண்ட காலம் ஆடியவர் ஹூடா என்பதால் கிளப் வீரர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

0 comments:
Post a Comment