மலேசியாவிற்கு கடத்தப்படவிருந்த ரூ. 3.2 கோடி மதிப்பு மதிப்புள்ள 8.1 டன் செம்மரக் கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.
வருவாய் புலனாய்வு பிரிவு சென்னை அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து சென்னை துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சில கண்டெய்னர்களில் 10 மரப்பெட்டிகள் இருந்தன. அவற்றில் ஏற்றுமதி துணிகள், கிரானைட் சிலாப்புகள் என்று எழுதியிருந்தது. அவைகளை திறந்து சோதனை நடத்தியபோது அதனுள்ளே 3.1 டன் செம்மரக் கட்டை இருந்தது தெரியவந்தது.
ஏற்றுமதி துணிகள் என்று பொய்யான லேபிளில் கண்டெய்னர் குடோனையும் கடந்து துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பலில் மலேசியா செல்லவிருந்த நேரத்தில் இவைகள் பிடிபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மரங்களை கடத்தியவர்கள் யார் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை மொத்தமாக ரூ.31.5 கோடி மதிப்புள்ள 80 டன் செம்மரக் கட்டைகள் பிடிபட்டுள்ளன. இதில் கடந்த மாதம் மட்டுமே 30.9 டன் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment