இயற்கையை அனுசரிக்காமல் விவசாயம் எவ்வாறு விசமாக மாறிப்போனதோ அது போன்றே இயற்கையை அனுசரிக்காத காரணத்தினால் எமது நாட்டின் அரசியலும் விசமாக மாறியுள்ளது.
விசம் கலந்த நம்முடைய நாட்டின் அரசியலை விசமற்ற அரசியலாக ஆக்குகின்ற செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
விவசாய செயற்பாட்டினை மேம்படுத்தும் முகமாக அதிமேதகு ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட உணவு உற்பத்தி ஆண்டு திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் (10) நடாத்தப்பட்ட விஷேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
இயற்கையை அனுசரிக்காமல் வேறு பாதைக்குச் சென்ற விவசாயத்தைத் தற்போது மீண்டும் இயற்கையை நோக்கியதாக ஆக்குகின்ற நிலைமையை எந்தளவிற்கு நாங்கள் அனுசரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதேபோன்று, விசம் கலந்த நம்முடைய நாட்டின் அரசியலை விசமற்ற அரசியலாக ஆக்குகின்ற செயற்பாட்டிலும் அனுசரிப்பினை மேற்கொள்ள வேண்டும்.
அதனடிப்படையில் தான் நல்லாட்சி என்கின்ற விடயம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும், கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த ஆட்சியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களும் சேர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment