ஆவுஸ்திரிய பொதுத் தேர்தலில் 31 வயது செபட்சியன் குட்ஸ் தலைமையிலான பழைமைவாத மக்கள் கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் குட்ஸ் உலகின் மிக வயது குறைந்த தலைவராக வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் மக்கள் கட்சி 31 வீத வாக்குளை வென்று முதலிடத்தில் உள்ளது. பெரும்பான்மை வாக்குளை பெறாத நிலையில் குட்சின் கட்சி குடியேற்ற எதிர்ப்பு சுதந்திர கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது.
1980களில் இருந்தே ஆஸ்திரியாவில் தொடர்ந்து கூட்டணி ஆட்சியே நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலுக்கு முன்னர் குட்ஸ் ஐரோப்பாவின் இளம் வயது வெளியுறவு அமைச்சராக இருந்தார். 2013 ஆம் ஆண்டு அவர் அந்த பதவியை ஏற்கும்போது அவரது வயது 27 ஆகும்.

0 comments:
Post a Comment