இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் தனது விருப்பத்திற்கு இணங்க மறுத்த தனது மருமகளையே இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கெலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தியாவில், சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலையம் பின்புறம் உள்ள துறையூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களின் வீட்டின் அருகில் மனைவியின் மாமனாரும், மாமியாரும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாமனார் மருமகளிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ய அதற்கு மருமகள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவரை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு குறித்த நபர் தலைமறைவாகி உள்ளார்.
இது தொடர்பாக கருமலைக் கூடல் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த நபரை தீவிரமாக தேடி வந்துள்ள நிலையில் ரெட்டியூரில் உள்ள கிணற்றில் குறித்த நபர் ஒளிந்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
குறித்த நபர் மேலே ஏறி வர மறுத்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப் பட்டு கயிறு கட்டி மேலே கொண்டு வந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

0 comments:
Post a Comment