முறைகேடாண புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தால் ஏற்படப்போகும் பேராபத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவோம்' எனும் தொனிப்பொருளிலான தேசிய காங்கிரஸின் பாலமுனைப் பிரகடனம் இன்று (29) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாட்டு மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்களை தெளிவூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாலமுனைப் பிரகடனத்தில், சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் மற்றும் புத்திஜீவிகள், கல்விமான்கள், சமயத் தலைவர்கள் கலந்து கொள்ளுமாறு, திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இப்பிரகடனத்துக்கு ஆதரவான சகல தரப்பினருக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான இந்த அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை, அரசாங்கம் மீள பெற வேண்டும் என இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment