கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
அவர் களனி பிரதேசசபை தலைவராக இருந்த காலத்தில், கிரிபத்கொட பிரதேச்திலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான 80 பர்ச்சஸ் காணி ஒன்று தொடர்பில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (06) காலை அங்கு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணியில் இரு பர்ச்சஸ் காணி பிரசன்ன ரணவீரவின் உறவினர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment