பிரதான செய்திகள்

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைகளை கண்டித்து கிழக்கு மாகாண சபையில் உதுமாலெப்பை அவசர பிரேரணை சமர்ப்பிப்பு


(அய்ஷத்)

மியன்மாரில் நடைபெற்றுவரும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைகளை கண்டித்தும், இனப்படுகொலைகளை உடன் நிறுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையிடமும், பர்மா அரசாங்கத்திடமும்; கோரிக்கை விடுக்க வேண்டும் எனும் அவசர பிரேரணை ஒன்றினை கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை  நாளை (7) நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளார்.

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களை மனித உரிமைகளை மீறி அரச படைகளும், கடும் போக்குவாத அமைப்புகளும் இணைந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைகளில் இது வரை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் உயிர்களை காப்பாற்றி கொள்வதற்காக தப்பிச்சென்றுள்ளனர்.

உலகில் சமாதானத்தை உருவாக்குவதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்படும் நிகழ்வுகளுக்கு எதிராக எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளாமல் மௌனமாக செயற்படுவது குறித்து இலங்கை முஸ்லிம் மக்கள் கவலையடைகின்றனர்.

இக்கொடுர சம்பவத்;தினை கன்டித்தும், இனப்படுகொலைகளை நிறுத்துமாறும் கோரியே குறித்த அவசர பிரேரணை நாளை எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பையினால் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment