பிரதான செய்திகள்

கிளிநொச்சி அகழ்வு நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் எண்ணெய் தாங்கி மீட்பு

கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் இன்று (8) காலை மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய எண்ணெய்த் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அகழ்வு நடவடிக்கையின் போது  மீட்கப்பட்ட எண்ணெய்த் தாங்கி  சுமார் முப்பதாயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட வெற்று  எண்ணெய்த் தாங்கியாகும்.

மீட்க்கப்பட்ட எண்ணெய் தாங்கியை  கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் விமானப்படையினர் தெரிவிக்கின்றனர்.

அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு பின் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவின் முகாம் ஒன்று இருந்ததாக விமானப்படை ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார். 



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment