பிரதான செய்திகள்

ரோஹிங்கிய விவகாரம் தாருஸ்ஸலாமில் விசேட சொற்பொழிவு


(பிறோஸ் முகம்மட்)

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலைகளை கண்டித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று (12) மாலை 7 மணிக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் நெருக்கடிக்கான பின்னணியும் அரசியல் எதிர்காலமும்| எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ரவூப் ஷெய்ன் இந்த விசேட சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.

இல.51, வொக்ஷோல் ஒழுங்கை, கொழும்பு 02 என்ற முகவரியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாமில் நடைபெறும் இவ்விசேட சொற்பொழிவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் குறித்து விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment