20 ஆவது திருத்த சட்ட மூலம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை(11) கிழக்கு மாகாண சபையில் சமா்ப்பிக்கப்பட்ட பிரேரனை பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் 17 மேலதிக வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று(11) காலை 9.30 மணிக்கு அவசரமாக கூடிய கிழக்கு மாகாண சபை கோரமின்மையால் மீண்டும் 11.00 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் 1.00 மணிக்குமாக இரண்டு தடவைகள் சபையின் தவிசாளாினால் ஒத்தி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (11) தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் கூடிய போதும் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் ஒருவரைத்தவிர ஏனைய எவரும் வருகை தராததனையடுத்து கோரமின்றி தவிசாளரினால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் பிற்பகல் 1.00 மணியளவில் கூடிய சபை அமா்வில் முதலமைச்சா் ஹாபிஸ் நஸீா் அஹமட் தலைமையிலான ஆளும் தரப்பு உறுப்பினா்கள் மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் 08 பேரும் வருகை தந்திருந்தனா்.
இதன் போது முதலமைச்சா் ஹாபீஸ் நஸீா் அகமட்டடினால் 20 ஆவது திருத்த சட்ட பிரேரனை முன்வைக்கப்பட்ட போது எதிா்க்கட்சியினா் வன்மையாகக் கண்டித்தனா். பின்னா் ஆளும் தரப்பு உறுப்பினா்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டதனால் சபை பெரும் அமளிதுமளியான நிலையில் காணப்பட்டது.
இதன் பின்னா் 20 ஆவது திருத்த சட்ட மூலத்துக்கான ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆளும்தரப்பில் 25 போ் ஆதரவாக்வும் எதிா்க்கட்சியிலிருந்து 08 போ் எதிராகவும் வாக்களித்தனா்.
இதனையடுத்து 17 மேலதிக வாக்குகளால் பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் ஆதரவளித்ததினால் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் குதூகலத்துடன் சபையை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment