பிரதான செய்திகள்

மெக்சிகோவில் நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

மெக்சிகோவின் தெற்கு கடற் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அது ரிச்டர் அளவில் 8.0 பதிவாகியுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இந்த நில நடுக்கத்தின் தாக்கம் மெக்சிகோவின் தலை நகரத்தில் உணரப்பட்டுள்ளதுடன், கட்டிடங்களும் அதிர்ந்துள்ளது. 

இதன் காரணமாக வீதிகளில் இருந்த மக்கள் பீதியடைந்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதன் காரணமாக மெக்சிகோ, குவாத்தமாலா, எல் சால்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா மற்றும் ஹோண்டுராஸ் அகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த விபரங்கள் இதுவரை வௌியாகவில்லை.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment