(ஸபாரி)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
கோணாவத்தை அபிவிருத்தி ஒன்றியத்தினர் அண்மையில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனை சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கினங்கவே மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிதியின் மூலம் பாடசாலைக்குத் தேவையான தளபாடங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம்.மிஸ்வர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிதியினை ஒதுக்கீடு செய்தமைக்காக மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனுக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment