பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் மலினப்படுத்துகின்றனர்

(ஏ.எல்.றியாஸ்)

கிழக்கு மாகாண சபை அமர்வுகள் நடைபெறும் தினங்களில் கிழக்கு மாகாண மக்களின் முக்கிய பிரச்சினைகளை மாகாண சபை அமர்வில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கின்ற போது பிரச்சினைகள் தொடர்பாக பதில் அளிப்பதற்கும், நடவடிக்கைகள் எடுப்பதற்கும் சபையில்   முதலமைச்சர், அமைச்சர்கள் இல்லாமை கிழக்கு மாகாண சபை அமர்வை மலினப்படுத்தும் செயற்பாடாகும் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று (7) தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

மாதந்தோறும் நடைபெறும் அமர்வுகளில் கிழக்கு மாகாண மக்களின் முக்கியமான பிரச்சினைகளை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கின்ற போது சபையில் முதலமைச்சரும், அமைச்சர்களும் சமூகமளிக்காத நிலையில் சபை நடவடிக்கைகள் இடைநிறுத்துவதனால் கிழக்கு மாகாண சபைக்கும், சபைக்கு தலைமை தாங்கும் தவிசாளருக்கும் அபகீர்த்தி ஏற்படுகின்றது. 

நாங்கள் கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்த காலத்தில் சபை அமர்வு தினத்தில் மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுடன், கிழக்கு மாகாண சபையின் கௌரவத்தை பாதுக்கும் விடயங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் என்பதனை அன்று எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்நிருந்து இன்று ஆளுங்கட்சியில் அமைச்சர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருக்கின்ற நீங்களே சாட்சியாக உள்ளீர்கள்.

மாகாண சபையுடைய ஆட்சிக் காலத்தின் இறுதி மூச்சுக் காலத்தில் இருக்கின்றோம். ஒருவருடம் நீடிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் கௌரவத்தை முதலமைச்சரும், அமைச்சர்களும் மலினப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக சபை அமர்வுகள் நடைபெறும் தினத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் அமர்வு நிறைவுபெறும் வரை சபையில் கலந்து கொள்ள வேண்டும்;.

இன்றைய சபைக்கு தலைமை தாங்கிய தவிசாளர் திடீரென இன்று கிழக்கு மாகாணத்தில் சூறாவளிக் காற்று வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் றஸாக்; என்னிடம் தெரிவித்துள்ளார். ஆகவே சபை நடவடிக்கைகளை அவசர அவசரமாக முடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இவ்வேளையில் தவிசாளரிடம் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி ஏற்படும் ஒரு அபாய நிலை இருப்பதாயின் அதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியதன் பின் அதற்கு ஏற்றால் போல் சபை நடவடிக்கைளை ஒழுங்குபடுத்திக் கொள்வோம் எனத் தெரிவித்தேன். 

இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட தவிசாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது சூறாவளி காற்றுக்குரிய அபாயம் கிழக்கு மாகாணத்தில் இல்லை என தெரிவித்ததையடுத்து கிழக்கு மாகணா சபை அமர்வின் நடவடிக்கைகள் பிற்பகல் 03.30 மணிவரை சீராக நடைபெற்றது என தெரிவித்தார். 

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment