பிரதான செய்திகள்

நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு எதிராக மாவட்ட செயலக வளாகத்தில் இன்று காலை முதல் தனிநபர் ஒருவர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்பவர் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் கமால் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

“ நுவரெலிய மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முள்ள தமது அதிகாரத்தை பல முறை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார். அதே போல் ஊழல் மோசடியிலும் ஈடுப்பட்டுள்ளார். இவ்வாறானதொரு நிலையில், அவருக்கு கலால் திணைக்கள ஆணையாளர் பதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பதவியை துஷ்பிரயோகப்படுத்தும் இவ்வாறானதொரு நபருக்கு உயர் பதவியை வழங்க கூடாது தகுதியுடைய வேறொருவருக்கு குறித்த பதவியை அரசு வழங்க வேண்டும் இதற்காகவே இந்த கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளேன்” என தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment