பிரதான செய்திகள்

சாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவானது


(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்தும் டெமாக் சவால் கிண்ணம் - 2017 சுற்றுப்போட்டியின் 1 வது அரையிறுதிப் போட்டி கடந்த (30) கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் கல்முனை  டொபாஸஸ் விளையாட்டுக் கழகம் மற்றும்  சாய்ந்தமருது பிளைங்கோர்ஸ்  விளையாட்டுக் கழகம் என்பன மோதின. இதில் சாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று இறுதிப்  போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை டொபாஸஸ் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 176 ஓட்டங்களை சகல விக்கெட்டுக்களையும் இழந்து பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 25.4 பந்துவீச்சு ஓவர்களை மட்டும் சந்தித்து 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இப்போட்டியின் போது, பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் சார்பாக அதிக ஓட்டங்களாக 59 ஓட்டங்களை ஆட்டமிழக்காமலும் மேலும் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியமைக்காக  ஆசிரியர் எஸ். சுஜானுக்கு  ஆட்ட நாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment