பிரதான செய்திகள்

இறக்காமம் முதலியார் அணைக்கட்டுக்கு ரூபாய் 60 இலட்சம் ஒதுக்கீடு

(றஹ்மத்துல்லா)

இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்டபட்ட வரிப்பத்தான்சேனை மலையடிக்குளத்தின் முதலியார் அணைக்கட்டு அமைப்பதற்காக நீர்ப்பாசன அமைச்சர் விஜித முனிசொய்சா ரூபா 60 இலட்சம் ஒதுக்கீடு செய்து வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் தெரிவித்தார்.

 இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையடிக்குளத்தின் முதலியார் அணைக்கட்டு பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல்  இருந்து வந்துள்ளது. இதனால் இப்பிரதேசத்திலுள்ள 550 ஏக்கர் நெற்செய்கைக்காணிகளில் செய்கை பண்ணுவதில் விவசாயிகள் பல்லாண்டு காலமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர். இது வரை காலமும் அணைக்கட்டினை மண்மூடைகள்,  மற்றும் மரக்குற்றிகளினால் இடைமறித்து தமது விவசாய நிலங்களுக்கு இரு போகமும் நீர் பாய்ச்சி வேளாண்மை சாகுபடி செய்து வந்துள்ளனா்.

விவசாயிகள் எதிர் கொண்டு வந்துள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதலியார் விவசாய அமைப்பினர் இடைவிடாது மேற்கொண்ட  முயற்சியின் பலனாக கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் கே.டி.சிறிவர்த்தன, இறக்காமம் பிரதேச செய்லாளர் எம்.எம்.நஸீர் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இவ்வேலைத்திட்டத்திற்கான உதவிகள் கிடைத்துள்ளன என்றார்.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment