பிரதான செய்திகள்

6 மாவட்­டங்­களில் இன்று பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பு

மாலபே தனியார் மருத்­து­வக்­கல்­லூரி தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சை­களை தீர்ப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்று  இரண்டாம் நாளாக பல பகு­தி­களில்  அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பினை முன்­னெ­டுக்­கவுள்ளது. 

நேற்று முன்­தினம் முதல் முன்­னெ­டுத்­து­வரும் தொடர்ச்­சி­யான பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பின் இரண்டாம் நாளாக இன்­றைய தினத்தில் வவு­னியா, மாத்­தறை, மாத்­தளை, அம்­பாறை, பதுளை மற்றும் மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­களில் ஒருநாள் அடை­யாள வேலை நிறுத்­தத்­தினை மேற்­கொள்­ள­வு­ள்ளதா­கவும் அச்­சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் நவீந்த டி சொய்ஷா தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், சைட்டம் மாலபே தனியார் மருத்­து­வக்­கல்­லூரி விவ­காரம் குறித்தும் அதில் காணப்­ப­டு­கின்ற குறை­பா­டுகள் தொடர்­பிலும் சகல மட்­டத்­திற்கும் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளோம். இது­வ­ரையில் குறித்த பிரச்­சி­னைக்­கான தீர்­வினை அர­சாங்கம் முன்­வைக்­க­வில்லை. 

இதில் எழுந்­துள்ள நடை­முறை சிக்கல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்­கை­யொன்­றினை தயா­ரிப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வாறு நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கை­யா­னது சிலரின் அர­சியல் தேவைப்­பா­டு­க­ளுக்­க­மைய மாலபே தனியார் மருத்­து­வக் ­கல்­லூரி சட்டரீதி­யா­னது என்­பதை காட்­டு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது. 

என­வேதான் இதற்கு எதி­ரா­கவும் சைட்டம் மாலபே தனியார் மருத்­துவ கல்­லூ­ரியை தடைசெய்தல் உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கைகளை முன்­வைத்து இந்த போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ளோம். மாவட்ட ரீதியில் சுழற்சி முறையில் சகல வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் இந்த போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் எதிர்­வரும் 15 ஆம் திகதி வரையில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். 

இதன்­போது வேலை­நி­றுத்தம் இடம்­பெறும் மாவட்­டங்­களின் வைத்­தி­ய­சா­லை­களில் சைட்டம் எதிர்ப்பு பதா­கைகள் மற்றும் கறுப்­புக்­கொடி என்­ப­னவும் பறக்­க­வி­டப்­படும். அத்­துடன் இது தொடர்பில் மாவட்ட ரீதியில் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம் என்றார்.

குறித்த வைத்­தி­யர்­களின் பணி­ப்ப­கிஷ்­க­ரிப்­பா­னது நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை முதல் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அதன்­படி நேற்று முன்­தினம் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், முல்­லைத்­தீவு, திரு ­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, நுவ­ரெலியா அம்­பாந்­தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்­டங்­களில் முன்­னெ­டுக்கப்­ பட்­டி­ருந்த நிலையில் குறித்த மாவட்­டங்­களில்  மருத்துவ நடவடிக்கைகள் ஸ்தம் பித்ததையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந் தனர். 

இன்றைய தினம் இரண்டாம் கட்ட மாக வவுனியா, மாத்தளை, அம்பாறை, பதுளை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment