உடலை மெலிவாக காட்டுவதற்காக அணியும் இடுப்புப் பட்டிக்குள் சுமார் 04 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை மறைத்து கொண்டுவந்த இரண்டு பெண்கள் நேற்றுக் (13) காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
துபாயிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க நேற்று (13) தெரிவித்தார்.
யு.எல் 226 விமானத்தில் நேற்று காலை 5.05 மணிக்கு வந்திறங்கிய இரண்டு பெண்களில் ஒருவரது இடுப்புப் பட்டிக்குள்ளிருந்தே இத்தங்க நகைகள் மீட்கப்பட்டன. இரண்டு பெண்களும் கொழும்பைச் சேர்ந்தவர்களென்றும் அவர்கள் சுமார் 40வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்துக்குச் சொந்தமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளே சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட மேற்படி இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர். இப்பெண்கள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment