- பைஷல் இஸ்மாயில் -
இலங்கையில் முதன் முதலாக தாபிக்கப்பட்ட நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு 350 மில்லியன் நிதியில் சகல வசதிகளையும் கொண்டு நிர்மானிக்கப்படவுள்ள வைத்தியசாலைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று மாலை (03) பிரதி அமைச்சர் பைஷல் காசீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்தினா கலந்துகொண்டு அதற்கான அடிக்கல்லினையும், நிந்தவூர் பிரதேச ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.
சுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசீம் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜிதவுக்கு பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னத்தையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன், ஐ.எல். மாஹீர், ஏ.எல். தவம், ஆகியோர்கலந்துகொண்டனர்.



0 comments:
Post a Comment