பிரதான செய்திகள்

பிக்குவின் பெயரில் பாடசாலை!


பௌத்த பிக்கு ஒருவர் யாழ்ப்பாணத்தில் தமிழ் பாடசாலையொன்றை தனது சொந்த நிதியில் கட்டிக்கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

குறிந்த இந்தப் பிக்கு வழங்கிய நன்கொடையில் முஸ்லிம் மாணவிகளுக்கு பாடசாலையொன்று கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், அக்கட்டத்திற்கு நிதியுதவியளித்த ரஜ மகா விகாரையின் விகாராதிபதி பன்னில ஆனந்த நாயகக்க தேரரின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

கம்பகா மாவட்டம் திஹாரியா அல்-அஸ்ஹர் மத்தியக் கல்லூரியின் தேவை கருதி அமைக்கப்பட்ட இக்கட்டடத் தொகுதியை மைத்திரிபால சிறிசேன, கடந்த வியாழக்கிழமை அன்று திறந்து வைத்துள்ளார்.

இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன ‘தேசிய நல்லிணக்கத்தை தாக்குதல்கள் இன்றி புரிந்துணர்வு மூலம்தான் கட்டியெழுப்ப முடியும்’ என்றார்.

‘நாட்டில் அனைத்து இனங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை வலுப்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அரசு முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவோர் எதிர் காலத்தில் கொடூர யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடும்’ என்றும் அவர் கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தேரர், தான் முஸ்லிம் பாடசாலையொன்றைக் கட்டிக்கொடுத்ததற்காக அச்சுறுத்தலை எதிர்நோக்கியதாகவும், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பாடசாலையொன்று அமைத்துக்கொடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment