2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை, 5669 நிலையங்களில் நடைபெற்றது.
கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment