(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சம்மேளனம் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த இலங்கையில் கிரிக்கட் துறையில் பிரகாசிக்கும் பாடசாலைகளை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கடந்த வியாளக்கிழமை (26) கொழும்புஇபண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சிறந்த கிரிக்கட் அணி விருது கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அணிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதன்போது கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர்இ கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.அப்ராஜ் றிலாஇ விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர்இ கிரிக்கட் அணித்தலைவர் மற்றும் உதவித் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு மேற்படி விருதினை பெற்றுக்கொண்டனர்.

0 comments:
Post a Comment