"பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளராக பணியாற்றிய டொக்டர் எம்.ஏ.நபீல் பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகப் பதவியேற்றுள்ளார். பிராந்திய வாய் சுகாதார பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாக பணியாற்றிய டொக்டர் எம்.எச்.எம்.சரூக் வருடாந்த இடமாற்றத்தின் பிரகாரம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்"
குறித்த இரு வைத்திய அதிகாரிகளும் கல்முனை பிராந்திய மக்களுக்காக ஆற்றிய அளப்பெரும் சேவைக்காக கல்முனை பிராந்திய பிரிவுத் தலைவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் திங்கட்கிழமை (06) பணிமனையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரிவுத்தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளராகவிருந்து கல்முனை பிராந்தியத்தில் ஆயுர்வேத துறையினை முன்னேற்றுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் டொக்டர் நபீல் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைகள் குறித்தும் அதேபோன்று டொக்டர் சரூக் முன்னெடுத்;த அளப்பெரும் சேவைகள் குறித்தும் பலரும் பாராட்டி பேசியதுடன், அவர்களுக்கு பொண்ணாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவித்தனர்.
(றியாஸ் ஆதம்)








0 comments:
Post a Comment