மாகாண மட்ட கிரிக்கட் போட்டி சனிக்கிழமை (21) மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் நடைபெற்றது. இதில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று அணிகள் பங்குபற்றியது.
முதல் போட்டி அம்பாறை மாவட்ட அணி மட்டக்களப்பு அணியை எதிர்த்தாடி 1 ஓட்டத்தினால் வெற்றியடைந்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
இறுதிப் போட்டியில் அம்பாறை மாவட்ட அணியும் திருகோணமலை மாவட்ட அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடின.
முதலில் துடுப்பெடுத்தாடிய அம்பாறை மாவட்ட அணி 15 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
145 என்ற வெற்றி இக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணி 14.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 63 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 81மேலதிக ஓட்டங்களினால் இந்தப் போட்டியில் அம்பாரை மாவட்ட அணி வெற்றிபெற்றது.
அம்பாறை மாவட்ட அணி சார்பாக விளையாடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு அம்பாரை மாவட்டத்திலுள்ள கழகங்கள், விளையாட்டு வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment