விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் 2ஆம் நாள் நிகழ்வாக சாய்ந்மருது பிரசேத செயலக உத்தியோகத்தர் அணிக்கும், காரைதீவு பிரசேத செயலக உத்தியோகத்தர் அணிக்குமிடையில் அணிக்கு 11 பேர் கொண்ட 12 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சிநேகபூர்க மென்பந்து கிரிக்கெட் போட்டி இன்று (20) காரைதீவு கனகரெட்ன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர் அணி முதலில் துடுப்பெடித்தாடி 12 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. காரைதீவு பிரதே செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.நௌஷாத் 54 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்மருது பிரசேத செயலக உத்தியோகத்தர் அணி 9.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கள் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. சாய்ந்மருது பிரசேத செயலக உத்தியோகத்தர் அணி இப்போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. சாய்ந்மருது பிரசேத செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.அசீம் 59 ஓட்டங்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வஹீல் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சாய்ந்மருது பிரசேத செயலக அணி உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர் மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் ஆகியோரின் தலைமையிலும் காரைதீவு பிரதேச செயலக அணி பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பீ.விவகானந்தராஜா தலைமையிலும் களமிறங்கியது.
இக்கிரிக்கெட் போட்டி சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிஷந்தன் மற்றும் காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் பீ.வசந்த ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
வெற்றி பெற்ற சாய்ந்தமருது பிரதேச செலயக உத்தியோகத்தர் அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை காரைதீவு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பீ.விவகானந்தராஜா அணித் தலைவர் எல்.ரீ.எம்.இயாஸிடம் வழங்கி வைத்தார்.
காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர் அணிக்கான ரன்னர் அப் கிண்ணத்தை சாய்ந்தமருது உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர் அணித் தலைவர் பீ.கோகுலராஜனிடம் வழங்கி வைத்தார்.


0 comments:
Post a Comment