அட்டாளைச்சேனை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியின் கபடிப் போட்டியில் அட்டாளைச்சேனை 7ஆம் பிரிவு அணி வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவாகியுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியின் கபடிச் சுற்றுப்போட்டி நேற்று (01) அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 8ஆணிகள் பங்குபற்றின.
இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை 14ஆம் பிரிவு மற்றும் அட்டாளைச்சேனை 7ஆம் பிரிவு அணிகள் மோதிக்கொண்டன. இதன்போது அட்டாளைச்சேனை 7ஆம் பிரிவு அணி 44 புள்ளிகளையும், அட்டாளைச்சேனை 14ஆம் பிரிவு அணி 33 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.
இதற்கினங்க அட்டாளைச்சேனை 7ஆம் பிரிவு அணி 11மேலதிக புள்ளிகளினால் வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவிவாகியது.
கடந்தகாலங்களில் கழகங்களுக்கிடையே நடைபெற்றுவந்த பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் இம்முமறை கிராம சேவகர் பிரிவு ரீதியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment