காலி நகர மத்தியில் வைத்து பெண்ணொருவரின் கண்களில் மிளகாய் தூளை தூவிவிட்டு அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதனையடுத்து குறித்த நபர் பறித்துச் சென்ற 150,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர் 48 வயது மதிக்கத்தக்க காலி பகுதியில் வசிக்கின்ற ஒருவர் என பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவரிடத்தில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment