பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பொத்துவில் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த மூன்று மாத காலமாகக் கூட்டப்படாமல் இருப்பது பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பெரும் தடையாக உள்ளதாகவு்ம் அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஒரு பிரதேசத்தினுடைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை உரிய காலப் பகுதியில் நடாத்துவதால் குறித்த பிரதேசங்களில் காணப்படும் பிரச்சினைகள் இனங்கானப்பட்டு அதற்கான தீர்வுகளும் பெறக்கூடியதாக இருக்கும்.
பொத்துவில் மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காண்பதற்கு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறாமல் இருப்பதால் வன இலாகா திணைக்களம், கரையோரம் பேணல் திணைக்களம், மீன்பிடி திணைக்களம் சார்ந்த பிரிவுகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் உள்ளது.
இதனால் பொத்துவில் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்குவதாகவும் தெரவிக்கின்றனர். பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களாக அமைச்சர் தயாகமகே, பிரதி அமைச்சர் பைசல் காசீம், சு.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் அப்தல் மஜீட் ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் அமைச்சர் தயா கமகே கலந்துகொள்வதில்லை எனவும் பிரதி அமைச்சர் பைசல் காசீம், சு.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் அப்தல் மஜீட் ஆகியோரின் இணைத்தலைமையிலே குறித்த கூட்டம் இடம்பெற்றுவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment