(அஸ்மி ஏ கபூர்)
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்று (10) இரவு அக்கரைப்பற்றிலுள்ள முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் கிழக்கு வாசல் இல்லத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது, சமகால அரசியல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து, இருவரும் பேசிக் கொண்டனர்.
குறிப்பாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து, தமது தரப்பிலுள்ள முக்கியமாக அபிப்பிராயங்களை ஆளுநரிடம் தே.காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா முன்வைத்தார்.
இச்சந்திப்பதில் ஆளுனருடைய மனைவி தீப்தி பொகல்லாகம , மகள் ஸானி பொகல்லாகம, மகன் தக்சிக பொகல்லாகம கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment