ரோஹிங்யா மக்களுக்கு எதிராக மியன்மார் அரசும், அந்நாட்டின் தீவிரவாத அமைப்புக்களும் மேற்கொள்கின்ற அரச பயங்கரவாதமும், இனச்சுத்திகரிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (8) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன.
குறிப்பாக நாட்டின் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிறுபான்மை சமூக அரசியல்வாதிகள் எந்தவித வேறுபாடுகளின்றி இதற்கு உரிய நடவடிக்கைகளை பெற்றுத்தர முன்வர வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டங்களின் போது மியன்மார் நாட்டின் தலைவி ஆங் சாங் சுசியின் கொடும்பாவி எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மியான்மரின் ரகைன் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தாக்குதல் நடவடிக்கை காரணமாக, சுமார் 164,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டின் இராணுவமும் ரகைன் பெளத்தர்களும் தங்களை விரட்டியடிப்பதற்காக, தங்கள் கிராமங்களை அழித்து வருவதாக ரோஹிங்யா மக்கள் கூறுகிறார்கள்.

0 comments:
Post a Comment