பிரதான செய்திகள்

சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ளாது படித்தவர்கள் என்று வீடுகளில் இருப்பதில் அர்த்தமில்லை: அதாஉல்லா

 (ஏ.எல்.றியாஸ்)

இந்த நாட்டிலே தங்களுக்கு தேவைப்பட்ட விடயங்களை அடைந்துகொள்வதற்கு சூழ்ச்சிக்காரர்கள் செய்கின்ற பழிகளை நீங்கள் புரிந்துகொள்ளாமல் படித்தவர்கள் என்று வீடுகளில் இருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் காலம் கழியும் உண்மை ஒளிரும் எனும் தொனிப்பொருளில் நேற்று (8) சம்மாந்துறை பிரதான வீதியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரவிக்கையில்,

ஞானசார தேரரை நாய்க்கூட்டில் அடைப்போம் என்று சொன்னவர்கள் தற்போது என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள். ஞானசார தேரரை யார் இயக்கினார்கள் இதற்குப்பின்னால் யார், யார்,  இருந்தார்கள் என்பதனை இந்த நாடு நமக்குச் சொல்ல வில்லையா? இரண்டு வருடத்திற்கு பின் எல்லாமே நமது கண் முன்னே தெரிந்து விட்டது. இறைவன் சூழ்ச்சிக்காரர்களுக்கெள்ளாம் சூழ்ச்சிக்காரன் என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

இற்றைக்கு இந்த மண்ணிலே எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. தமிழர் விடுதலைப் போராட்டம் என்று யுத்தம் நடைபெற்றது. பாவம் தமிழ் மக்கள் அந்தப் போராட்டம் தமிழர் விடுதலைக்கானதல்ல இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையிலான யுத்தம் இலங்கையிலே நடைபெற்றது என்பதனை வரலாற்றிலே எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதனை தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னர் அகிம்சைப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஆயுதப் போரட்டம் எனும் போர்வையில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் உள்வாங்கப்பட்டு ஈற்றிலே இரண்டு நாடுகளுடைய சண்டையாக மாற்றப்பட்டு அமெரிக்கா புலிகளை தனது கையிலே எடுத்துக்கொண்டு இந்நிய பிரதமர் ரஜீவ் காந்தியை கொண்டது. இந்த வரலாறுகளை தமிழ் மக்கள் புரியாமல் விடுதலைப் போராளிகள், போராளிகள் என்று ஏமாந்து கொண்டிருக்கின்ற நிலைமைகளைப் பார்க்கின்ற போது பெரும் கவலையாகவுள்ளது.

இந்த நாட்டிலே நீதியரசராக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட மாகாண சபையினுடைய அதிகாரங்களை பாராளுமன்றம் எடுக்கக்கூடாது என்று 20வது திருத்தச் சட்டமூலத்தை நிராகரித்து வைத்துள்ளார். ஆனால் வரலாற்றிலே கவலைப்பட வேண்டிய விடயம் கிழக்கிலே இருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், முதலமைச்சரும் சமுதாயத்தினையும், ஜனநாயகத்தையும் போராடி இன்னும் போதாது என்று சொல்லுகின்ற மாகாண அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க நினைக்கின்றனர்.

குறிப்பாக நான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன். ஒரு சிறிய திருத்தத்தோடு கொண்டு வந்தால் நாங்கள் நிறைவேற்ற ஆயத்தமாக இருக்கின்றோம் என நீங்கள் கூறுவது ஒரு மாயாஜால வித்தையாகும். இதனூடாக நீங்கள் இந்த மாகாணத்தினுடைய தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டையும் ஏமாற்றப் போகின்றீர்கள் என்பதுதான் இதனுடைய உண்மையாகும்.

இந்த 20வது திருத்தச் சட்ட மூலத்தை சிங்கள பிரதேசங்களிலே இருக்கின்ற மாகாண சபைகள் நிராகரித்திருக்கிறது. இந்தசூழ்நிலையில் உரிமை வேண்டும் என்கின்ற வடக்கும், கிழக்கும் இன்னும் அதனைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்ற நிலமை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாண சபையிலே மக்கள் பிரதிநிதியாக இருக்கின்ற தமிழரோ, முஸ்லிமோ இச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் நீங்கள் வராலற்றில் துரோகிகள் என்று எழுதப்படுவீர்கள்.

தமிழர்களும், முஸ்லிம்களும் சிங்ககளவர்களோடு பேசி இனத்தீர்வு தொடர்பில் சாதித்துக்கொள்கின்ற வாய்ப்புக்கள் நிறைந்திருக்கின்ற இந்த அரிய சந்தர்ப்பத்தில் கள்ளத்தனமான வேலைகளுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment