லக்ஷபான மற்றும் குக்குலேகங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலும் அதிக மழைபெய்து வருவதால் லக்ஷபான மற்றும் குக்குலேகங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால் களனி கங்கையை அண்டி தாழ்நில் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, அதிக மழை காரணமாக குக்குலேகங்கையின் நீர்தேக்கத்தின் வான் கதவுகளில் ஒன்று திறக்கப்பட்டுள்ளதால் அதனை அண்டி தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அந் நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments:
Post a Comment