20வது திருத்தச் சட்டத்தின் உட்பிரிவுகள் அல்லது முன்மொழிவுகள் திருத்தப்படுவதற்கு பரந்த சமூக கலந்துரையாடல் அவசியம் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இதற்கு கட்சி தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவும் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கிடையில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது.
20வது திருத்தச் சட்டம் உள்ளடக்கியுள்ள உட்கூற்றின்படி, பிரதேச சபை தேர்தலின்போது அரச ஊழியர்கள் அதில் போட்டியிட முடியாது.
அத்துடன் 20வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்றால் அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாட வேண்டும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

0 comments:
Post a Comment