(எஸ்.அஷ்ரப்கான்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் பணத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபைஉறுப்பினர்கள் விலை போன நிலையிலேயே அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவுவழங்கி உள்ளனர் என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் சட்டத்தரணி எம். எம். பஹீஜ் தெரிவித்தார்.
இது விடயமாக சட்டத்தரணி எம். எம். பஹீஜ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது,
தமிழ் தேசிய கூட்டமைப்பு மொத்தமாக விலை போய் விட்டதா? என்கிற வலுவான சந்தேகம் இருக்கவே செய்கின்றது.இருப்பினும் இக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் அறிக்கை சற்றுஆறுதல் தருகின்றது.
அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தம் முன்மொழியப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. அனைத்துமாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்கிற பிரதான விடயத்தை இத்திருத்தஏற்பாடு கொண்டு உள்ளது. மாகாண சபைகள் கலைக்கப்பட வேண்டிய நாளை பாராளுமன்றம் தீர்மானிக்கும் என்றும்அத்திகதி கடைசியாக உருவாக்கப்பட்ட மாகாண சபையினுடைய பதவிக் கால முடிவுக்கு பிந்தியதாக இருக்க கூடாது.என்றும் அவ்வாறு திகதி ஒன்று குறித்துரைக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அத்திகதிக்கு முன்னர் முடிவடைகின்றமாகாண சபைகளின் பதவி காலம் அந்த குறித்துரைக்கப்பட்ட திகதி வரை நீடிக்கப்பட வேண்டும் என்றும் ஏதேனும்வேறு காரணங்களுக்காக மாகாண சபைகள் எவையேனும் கலைக்கப்படுமாயின் அவற்றின் நிர்வாகம்பாராளுமன்றத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் இதில் சொல்லப்பட்டு உள்ளது.
இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமா? அல்லதுஇம்மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பும் நிகழ்த்தப்பட வேண்டுமா? என்பதைதீர்மானிப்பதற்காக உயர்நீதிமன்றத்தின் முன்னிலைக்கு சென்றது.
அரசியல் அமைப்பு சட்ட ஏற்பாடுகளின்படி மாகாண சபைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக சட்டங்கள்உருவாக்கப்படுகின்றபோது மாகாண சபைகளின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி கேட்டறிதல் வேண்டும். இந்நிலையில்அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் குறித்து கிழக்கு மாகாண சபையின் கருத்து கேட்கப்பட்டுஇருந்ததாக சொல்லப்படுகின்றது. அதற்கு அமையவே கடந்த 11 ஆம் திகதி கிழக்கு மாகாண சபை இச்சட்டமூலத்துக்குஆதரவாக வாக்களித்தது. இச்சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்டுஇருந்த திருத்த யோசனைகளை அடிப்படையாக வைத்தே ஆதரவு வழங்கினர் என்று கூறுகின்றனர்.
எது எவ்வாறாயினும் மாகாண சபைகளின் ஆட்சி காலம் நீடிக்கப்படுவது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். பாராளுமன்றத்தின் ஆட்சி காலத்தையாயினும் சரி, ஜனாதிபதியின் பதவிக் காலத்தையாயினும் சரி நீடிக்கவேண்டுமாயின் சர்வசன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் உள்ளூராட்சி சபைகளின் காலத்தைநீடிக்க சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. 04 வருடங்கள் கொண்ட ஒரு பதவிக் காலத்துக்கென மக்கள் வாக்களிக்க நேர்ந்தாலும் இச்சபைகளின் காலம் உள்ளூராட்சி விவகாரங்களுக்கானஅமைச்சரால் நீடிக்கப்படலாம் என்று தெரிந்து வைத்து கொண்டே வாக்களிக்கின்றனர்.
இப்பின்னணிகளில்பார்க்கின்றபோது அரசியல் அமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கான ஒரு பதவிக் காலம் 05 வருடங்களுக்கெனமட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இக்கால எல்லையை மேலும் நீடிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்புநடத்தப்பட்டேயாதல் வேண்டும் இன்று வெளிப்படை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு மத்திய அரசாங்கம் இணங்க வேண்டும் என்கிறமுன்நிபந்தனையுடன்தான் 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு வழங்கி உள்ளது என்றுதமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இப்போது தெரிவித்து உள்ளார். இது கிழக்குமாகாண மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களையும், பாரிய அச்சங்களையும் தோற்றுவித்து உள்ளது.
அமெரிக்காதலைமையிலான மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரல்கள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐ. நா. மனிதஉரிமைகள் பேரவை போன்றவற்றின் ஊடாக இலங்கை மீது திணிக்கப்பட்டு வருகிற நிலையில் இந்நிகழ்ச்சி நிரலுக்குள்உள்வாங்கப்பட்டோரான ரணில் – சம்பந்தன் – ஹக்கீம் – சுமந்திரன் கூட்டு கிழக்கு மாகாண மக்களின் அபிப்பிராயத்தைகேட்டறியாது கிழக்கை வடக்குடன் இணைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு உள்ளது தெளிவாகியுள்ளது.
கிழக்கில்பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களும், இங்கு முதலாவது சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ் மக்களில்பெரும்பான்மையானோர் மட்டும் அன்றி இரண்டாவது சிறுபான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களும் வடக்கு, கிழக்குஇணைவதை விரும்பவே இல்லை, இவ்விணைப்பை அனுமதிக்க போவதும் இல்லை. வடக்கு, கிழக்கை இணைக்கின்றஎண்ணம் அரசாங்கத்துக்கு இருக்குமானால் அது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதுகட்டாயம் ஆகும்.
நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நாட்டில் நல்லாட்சி நடக்கவே இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொல்லாத ஆட்சியேதான் நடக்கின்றது. நல்லாட்சிக்கு மக்கள் வாக்களித்துஇருந்தனர். ஆனால் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவே இல்லை. முஸ்லிம் மக்களுக்கு வாக்களித்து இருந்தபடிஞானசார தேரர் நாய்க் கூண்டில் அடைக்கப்படவில்லை, பொதுபலசேனா முடக்கப்படவில்லை. அளுத்கம கலவரத்தின்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. தம்புள்ளை பள்ளிவாசல் காணி பிரச்சினை தீர்க்கப்படவில்லை,கிராண்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்நிறைவேற்றப்படவில்லை. வில்பத்து காணி பிரச்சினை முடிவடையவில்லை. பொதுவாக நாடு பூராக குறிப்பாகவடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் விவசாய காணிகள் விடுவிக்கப்படவில்லை.
அம்பாறையைபொறுத்த வரை வட்டமடு காணி பிரச்சினை, நுரைச்சோலை வீட்டு திட்ட பிரச்சினை, கரும்பு வியாபாரிகளின்பிரச்சினை, மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட பிரச்சினை போன்றவற்றுக்கு இன்னமும் தீர்வு இல்லைஎன்பதுடன் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை வழங்கப்படவில்லை, கல்முனை நகர அபிவிருத்தி திட்டம்நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பனவும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய கூடிய விடயங்கள் ஆகும்.
மக்கள் மீது வரிச் சுமை சுமத்தப்பட்டு உள்ளது. புதிதாக கொண்டு வரப்பட்டு உள்ள உள்நாட்டு இறைவரி சட்டம் மக்கள்மீது திணிக்கப்பட்ட பாரிய வரிச் சுமை ஆகும். பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. தனியார் மருத்துவகல்லூரி பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை. வேலையில்லா பிரச்சினை தீர்க்கப்படவும் இல்லை, வேலையற்றபட்டதாரிகளுக்கு கணிசமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படவும் இல்லை. ஊனமுற்ற படை வீரர்கள் போராட்டம்செய்கின்றார்கள்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை, துறைமுக அபிவிருத்தி அதிகார சபை, வைத்தியசாலை போன்றவற்றின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டங்களில் மாறி மாறி ஈடுபடுவதை காணமுடிகின்றது. மொத்தத்தில் மக்கள் சந்தோசமாக இல்லை. அதே போல அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுகின்றது. தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்களின் வாக்களிக்கும் உரிமை உறுதிப்படுத்தப்படுவது உண்மையான நல்லாட்சியின்அம்சங்களில் முக்கியமான ஒன்றாகும்.
முஸ்லிம் கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உள்ள தொடர்புகளை வைத்து கொண்டு ஏதேனும்கூட்டமைப்பை உருவாக்குகின்ற முயற்சியில் ஈடுபடுமாக இருந்தால் தேசிய காங்கிரஸ் சாதகமாக அதைபரிசீலிக்காது. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தீர்வு, அதிகாரம், காணி பிரச்சினை, வாழ்வாதார பிரச்சினைபோன்ற விடயங்கள் தொடர்பாக பொது முடிவை அடைய இணங்கி செயற்படுவது குறித்து சாதகமாக பரிசீலிக்கும். தேர்தல் வருகின்றபோதுதான் தேர்தல் கூட்டு குறித்து தீர்மானிக்க முடியும். எமது சமூகத்தின் விருப்பம், தேவைஆகியவற்றை அடிப்படையாக வைத்தே தீர்மானங்களை கட்சி எடுக்கும்.

0 comments:
Post a Comment